உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவற்றில் அடித்த பட்டிமாவு உரிந்து வர காரணம் என்ன?

சுவற்றில் அடித்த பட்டிமாவு உரிந்து வர காரணம் என்ன?

புதியதாக கட்டப்பட்ட கட்டடத்தில், அடிக்கப்பட்ட பட்டி உரிந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? குறைபாடு பூச்சிலா அல்லது பட்டி மாவிலா? என விளக்குகிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க துணை தலைவர் (காட்சியா) விஜயகுமார்.கட்டுமானப்பணி மேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் அவர்.நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன், கீழ் தளம் வீடு கட்டிய போது, கான்கிரீட் போடும்போது மின்சார ஒயர் இழுக்க பி.வி.சி., பைப்புகள் போட்டிருந்தார்கள். அதன் இணைப்புகளில் சிமென்ட் பால் உள்ளே சென்று விட்டது. தற்பொழுது முதல் மாடி கட்டி கொண்டிருக்கிறோம், இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?-சரவணன், பேரூர்இணைப்புகளில் டேப் ஒட்டுவதை விட, பி.வி.சி., சொல்யூஷன் கொண்டு ஒட்டுவது நல்லது. அதன் பின் டேப் சுற்றிக் கொள்ளலாம். கான்கிரீட் போடும்போது, எலக்ட்ரீசியன் உடன் வைத்து செக் செய்து கொள்ளலாம்.ப்ளை ஆஷ் கற்களால் கட்டடம் கட்டும்போது, அதில் மின்சாரம் மற்றும் பிளம்பிங் பைப் செல்ல காடி எடுப்பதால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்படும்; காடி சீராக இல்லாமல் சிதைந்து விடும் என்கிறார்கள். இது உண்மையா?-முத்துசாமி, பீளமேடுஇல்லை. மின்சாரம் மற்றும் பிளம்பிங் பைப் செல்ல காடி எடுக்கும் போது, எவ்வளவு பைப்புகள் செல்ல வேண்டும் என்று கணக்கிட்டு, ஒரு பைப்புக்கு ஒரு அங்குலத்துக்கு ஒன்று என்ற கணக்கில் கட்டிங் இயந்திரத்தில், கீறல் போட வேண்டும்.இரண்டு பைப்புகள் என்றால், மொத்தம் மூன்று கட்டிங் போட வேண்டும். கட்டிங் போட்ட பின் அதை உடைத்தால் நல்லது. இதை காடி எடுக்கும் பணியாளரிடம் தெரிவித்து, சரியாக பின்பற்ற வைத்தால் பிரச்னை வராது.என் நண்பர் புதிதாக கட்டிய வீட்டில், சுவற்றில் பட்டி உரிந்து வருகிறது. இதற்கு என்ன காரணம். குறைபாடு பூச்சிலா அல்லது பட்டி மாவிலா?-நாராயணன், துடியலுார்பொதுவாக, புதிய வீட்டிற்கு சீசனிங் பீரியட் அதாவது, ஆறு மாத காலத்துக்குப் பிறகு பட்டி வைத்து பெயின்ட் அடிப்பது நல்லது. அவ்வாறு உடனே பட்டி வைத்து பெயின்ட் அடிக்கும் பட்சத்தில், சுவர்களில் ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். தரமான கம்பெனி பட்டிகளையே பயன்படுத்த வேண்டும்.எங்கள் வீடு கட்டி, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. வீட்டுக்குள் நாங்கள் செய்த கப்போர்டு, டிவி ஸ்டாண்ட் ஆகியவற்றில், கரையான் ஏறிவிட்டது. இதை எப்படி தடுக்கலாம்?-சம்பத், அன்னுார்பொதுவாக வீடு கட்டும்போது, தரமான கரையான் தடுப்பு மருந்துகளை, அடித்தளம் பேஸ்மென்ட் மற்றும் டைல்ஸ் போடுவதற்கு முன்பாக என, மூன்று நிலைகளில் பயன்படுத்த வேண்டும்.அவ்வாறு கரையான் தடுப்பு மருந்துகளை உபயோகிக்கும் பொழுது, கரையான்களை தவிர்க்க முடியும். கரையான் வந்துவிட்டால் கப்போர்ட் மற்றும் மர வேலைகளை பிரித்து, சரியான முறையில் மீண்டும் கரையான் தடுப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொண்டால் கரையான் வராது.நாங்கள் புதிதாக வீடு கட்ட எண்ணி உள்ளோம். இப்போது வெப்ப தடுப்பு சுவர் கட்ட முடியும் என்கின்றனர். அப்படிப்பட்ட சுவர்கள் கட்டுவதற்கு, கட்டுமான பொருட்கள் உள்ளதா, கட்ட முடியுமா?-கருணாகரன், சுந்தராபுரம்வெப்ப தடுப்பு சுவர் என்பது, குழி சுவர் கட்டுமானத்துடன் கூடிய வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான வெப்ப காப்பு ஆகும். இன்சுலேடிங் போம், இன்சுலேஷன் போர்டு, ரோல் இன்சுலேஷன் மற்றும் பல விருப்பங்களுடன், உள் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு இடையில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம், சுவர்கள் வழியாக வெப்ப இழப்பைத் தடுக்கிறது.வெப்பத் தடுப்பு கட்டுமான பொருட்கள் செல்லுலோஸ், கண்ணாடியிழை மற்றும் கனிம (பாறை அல்லது கசடு) கம்பளி ஆகியவை, தளர்வான- நிரப்பு காப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களாகும். இந்த பொருட்கள் அனைத்தும், மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை