உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலுக்கு புதிய பஸ் எப்போது? அறிவித்து ஓராண்டாகியும் இழுபறி

மருதமலை கோவிலுக்கு புதிய பஸ் எப்போது? அறிவித்து ஓராண்டாகியும் இழுபறி

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, கூடுதல் பஸ் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும், புதிய பஸ் வாங்கப்படாமல் இழுபறி ஏற்பட்டு வருகிறது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் மலைப்பாதை உள்ளது. மலைப்பாதையில், பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், 3 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழா காலங்களில், கோவில் நிர்வாகத்தினர், தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு கூடுதலாக புதிய பஸ்கள் வாங்கப்படும் என, கடந்தாண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்து ஓராண்டாகியும், கோவிலுக்கு புதிய பஸ் வாங்கும் பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்களின் வசதிக்காகவும், கோவிலின் வருமான இழப்பீட்டை தவிர்க்கவும், விரைவில் புதிய பஸ் இயக்க, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ''புதிய பஸ் வாங்கும் நடவடிக்கை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதத்தில், கூடுதல் புதிய பஸ் வாங்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ