உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

கிணத்துக்கடவு, -கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளை நிலத்தை சேதப்படுத்தி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில் உள்ள லட்சுமிநகர் பகுதியில், விவசாயி செந்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை மற்றும் அரை ஏக்கரில் பாகற்காய் பயிரிட்டுள்ளார்.இரண்டு வகை காய்களும் பறிப்புக்கு தயார் நிலையில் உள்ள நிலையில், காட்டுப்பன்றிகள் அரை ஏக்கர் அளவுக்கு புடலை சாகுபடியை சேதப்படுத்தி உள்ளது.மேலும், பாகற்காய் பயிரிடப்பட்ட இடத்தில் ஒரு சில இடத்தை பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதேபோன்று, சுற்றுப்பகுதியிலும் விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயி செந்தில் கூறியதாவது:ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் புடலை மற்றும் அரை ஏக்கரில் பாகற்காய் பயிரிட்டுள்ளோம். தற்போது, பந்தல் காய்கள் பறிப்பு நிலையில் உள்ளன. இந்நிலையில், இரவு நேரத்தில் அதிக அளவு காட்டு பன்றிகள் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.இதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள வாழை தோப்பையும் சேதப்படுத்த துவங்கியுள்ளது. புடலை பயிரிட தற்போது வரை, 40 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. அதிகளவு பயிர் சேதம் அடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பயிரை காக்க வேலி அமைத்து துணிகள் கட்ட ஏற்பாடு செய்துள்ளோம். காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பயிர் சாகுபடி செய்ய அச்சமாக உள்ளது. வனத்துறையினர் இதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை