உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணியர் நிழற்கூரை புதிதாக அமைக்கப்படுமா?

பயணியர் நிழற்கூரை புதிதாக அமைக்கப்படுமா?

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் கிராமத்தில் பயணியர் நிழற்கூரை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட வரதனுார் ஊராட்சி, செங்குட்டைபாளையம் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.கிராமத்தில் மூன்று பஸ் ஸ்டாப்கள் உள்ளன. இதில், ஒரு இடத்தில் மட்டுமே நிழற்கூரை உள்ளது. அங்கும் பஸ் நிறுத்தம் செய்வதில்லை. இதனால், அந்த நிழற்கூரையையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். மீதம் இருக்கும் இரண்டு இடத்திலும் நிழற்கூரை இல்லை.இதனால் பயணியர்கள் அருகில் உள்ள கடைகளிலும், மரத்தின் நிழலிலும் வெயில், மழை காலத்தில் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.எனவே, இந்த இரண்டு இடத்திலும் பஸ் நிற்கும் இடத்தின் அருகாமையில் நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ