உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது 

மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது 

ஆனைமலை;ஆனைமலை அருகே, ஆழியாறு பகுதியில், மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை, ஆழியாறு போலீசார் கைது செய்தனர்.ஆனைமலை அருகே, ஆழியாறு மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வி,50,தாயார் சுப்பத்தாள்,80, உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை திண்ணையில் சுப்பாத்தாள் துாங்கி கொண்டு இருந்தார். அப்போது, சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பெண் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடினார்.சுப்பாத்தாள் சப்தம் கேட்டு, வீட்டினுள் இருந்த செல்வி வெளியே வந்த போது, அங்கிருந்து ஓடிய பெண்ணை, அப்பகுதியில் இருந்தோர் அந்த பெண்ணை பிடித்தனர்.அதன்பின், ஆழியாறு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், கோவை கணபதியை சேர்ந்த கவிதா, 40, என்பதும், பண கஷ்டம் காரணமாக திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி