உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை கோவையில் மகளிர் வாக்கத்தான்

நாளை கோவையில் மகளிர் வாக்கத்தான்

கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக, சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்லுாரி சார்பில், 'டெக்ஸ்சைட்மென்ட்' மகளிர் பங்கேற்கும் வாக்கத்தான் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதாக, கல்லுாரி இயக்குனர் அல்லி ராணி தெரிவித்தார்.இதுகுறித்து, கல்லுாரி இயக்குனர் அல்லிராணி கூறியதாவது:கோவை விழாவில், ரேஸ்கோர்ஸ் பகுதியில், 6ம் தேதி காலை, 8:30 மணிக்கு வாக்கத்தான் நடைபெறவுள்ளது. 15 வயது முதல் 40 வரையும், 40க்கு மேல் என்ற இரண்டு பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.மகளிர் இதில் தங்களுக்கு விருப்பமான ஆடையில் பங்கேற்று, 2 கி.மீ., நடக்க வேண்டும். புதுவிதமான ஆடை வடிவமைப்புகளுடனும் பங்கேற்கலாம். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், மகளிர் டெய்லர்கள், டிசைனர்ஸ் ஆடைகளில் அவரவர் படைப்பு திறனை காண்பிக்க சிறந்த தளமாக இது அமையும். மேலும், பிற கல்லுாரியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்களும் பங்கேற்கவுள்ளனர். கோவை விழாவில் டெக்ஸ்டைலையும் கொண்டாடவேண்டும் என்பதை மையமாக கொண்டே வாக்கத்தான் நிகழ்வை நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 87549 23170 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி