உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3,744 சாலைகளில் 2,407ல் பணிகள் ஓவர் ;மாநகராட்சி கமிஷனர் தகவல்

3,744 சாலைகளில் 2,407ல் பணிகள் ஓவர் ;மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை;''புதிதாக போட வேண்டிய, 3,744 ரோடுகளில், 2,407 ரோடுகள் போட்டு முடிக்கப்பட்டுள்ளன,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.அவர் நேற்றுநிருபர்களிடம் கூறியதாவது:மாநகராட்சியில் இருக்கும், 36 நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களில்(எம்.சி.சி.,) உபகரணங்கள் பழுது உள்ளிட்ட காரணங்களால், ஏழு மையங்கள் செயல்படுவதில்லை. முழுமையாக மையங்கள் செயல்பட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குப்பை மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக, 'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தின்கீழ் ரூ.135 கோடி நிதியில் 'பயோ காஸ் பிளான்ட்', எம்.ஆர்.எப்., மையம் உள்ளிட்ட வசதிகள் பெற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளின் அடிப்படையில், 95 சதவீதம் நமக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.கடந்த ஓராண்டில், விதிமீறி குப்பை கொட்டுதல் உள்ளிட்டமைக்காக ரூ.6.70 லட்சம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூ.27 லட்சம், டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் கொண்டவர்களிடம் இருந்து, ரூ.6.69 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2022ம் ஆண்டு முதல் புதிதாக போட வேண்டிய, 3,744 எண்ணிக்கையிலான ரோடுகளில், 2,407 ரோடுகள் போட்டு முடிக்கப்பட்டுள்ளன; அதாவது, 613.07 கி.மீ., துாரத்தில், 411.9 கி.மீ.,க்கு ரோடு போடப்பட்டுள்ளது.24 மணி நேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணி முடியாதததால், 533 ரோடுகளில்இன்னும் பணி துவங்கப்படாமல் உள்ளது. இதர ரோடுகள் போடும் பணி நடந்து வருகிறது.புதிதாக தார் ரோடு அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் முடிந்த இடங்களில், ரோடு போடுதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.447 கோடி கோரி, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ