உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உலக மண் தின விழிப்புணர்வு முகாம்

 உலக மண் தின விழிப்புணர்வு முகாம்

தொண்டாமுத்தூர்: வேளாண்மை துறை சார்பில், உலக மண் தினம் குறித்த விழிப்புணர்வு முகாம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) சக்திவேல் சிறப்புரையாற்றினர். மண் மற்றும் பாசன நீர் மாதிரி எடுத்தல் தொடர்பாக, உரக்கட்டுப்பாடு ஆய்வக வேளாண்மை அலுவலர் கவுசல்யா செயல் விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் முகமது தாரிக், இந்தாண்டு மண்வள தினத்தின் மையக்கருத்தான, 'ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்' என்ற தலைப்பில், விரிவாக எடுத்துரைத்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி