மேலும் செய்திகள்
காப்பகத்தில் மோதல் சிறுவன் அடித்துக் கொலை
19-Jun-2025
கோவை; பொள்ளாச்சி காப்பகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கோவை மாவட்டம், சோமனுாரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மகன் வருண்காந்த், 22; மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பொள்ளாச்சி, முல்லை நகரிலுள்ள, 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.கடந்த மே 12ல் காப்பகத்தினர் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். அவர் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்து நாடகமாடினர். மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கையில், வருண்காந்த் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் டாக்டர் கவிதா, இவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, பணியாளர்கள் கிரிராம், ஷாஜி, நித்திஷ், ரங்கநாயகி, சதீஷ், ஷீலா, செந்தில்பாபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக ஜாமின் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட், 11 பேரில், லட்சுமணன், ஸ்ரேயா, சுருதி, கிரிராம், ரங்கநாயகி, செந்தில் பிரபு ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
19-Jun-2025