| ADDED : மே 07, 2024 03:56 AM
கடலுார்,: கடலுார் மாவட்டத்தில் 71 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதிகளவு மாணவர்களை தேர்வு அனுப்பி ஏரளமான பள்ளிகள் சாதித்துள்ளன.கடலுார் மாவட்டம், பாசார் சத்திய சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 253 மாணவர்கள், 135 மாணவியர் என, 388 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். வடலுார் வள்ளலார் மெட்ரிக் பள்ளி 251 மாணவர்கள், 112 மாணவியர் என, 363 பேர் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்தை பிடித்துள்ளனர். சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் இருந்து 240 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.அதேபோன்று சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளியில் 238 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடலுார் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 170 பேர் தேர்ச்சி பெற்று 5ம் இடம் பிடித்தனர்.காட்டுமன்னார்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 168 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதே போன்று, லால்பேட்டை இமாம் கசாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 157 பேர், எருமனுார் வி.இ.டி.மேல்நிலைப்பள்ளியில் 152 பேர், காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 138 பேர், எஸ்.குமராபுரம் அரசு மாதிரிப் பள்ளியில் 129 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத சாதனை படைத்தன.