உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுப்போட தேவையான 13 வகை ஆவணங்கள்

ஓட்டுப்போட தேவையான 13 வகை ஆவணங்கள்

கடலுார்,- வாக்காளர்கள் 13 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, ஓட்டுப்போடலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக, 13 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, ஓய்வூதிய ஆணை, சேமிப்பு கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது வங்கி, அஞ்சலகம்) பணியாளர் அடையாள அட்டை (புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில - பொதுத்துறை நிறுவனங்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை, அலுவலக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை. மேற்காணும் 13 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அசல் ஆவணங்களை, ஓட்டுச்சாவடிக்கு எடுத்து சென்று ஓட்டளிக்கலாம். வாக்காளர் தகவல் சீட்டை வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தலாமே தவிர அடையாள சான்றாக பயன்படுத்த இயலாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி