உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுச்சேரி சாராயம் விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி சாராயம் விற்ற 2 பேர் கைது

கடலுார்: கடலுாரில் புதுச்சேரி சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், முதுநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொடிகால்குப்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் 10 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரிந்தது.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்,49; என்பதும், புதுச்சேரி, ஆராய்ச்சிக்குப்பத்தில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்துவிற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து டி.எஸ்.பி., பிரபு தலைமையில் போலீசார், ஆராய்ச்சிக்குப்பத்தில் சம்பந்தப்பட்ட சாராயக் கடைக்கு சென்று சோதனை செய்ததில் அனுமதியின்றி அதிகளவு சாராய பாக்கெட்டும், புதுச்சேரி அரசின் சீல் இல்லாத மதுபாட்டில்களும் விற்பனை செய்வது தெரிந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து இளங்கோவனையும், சாராயக் கடை மேலாளர் புதுச்சேரி அருள்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின், 1,740 சாராய பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை