உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை சிதம்பரத்தில் துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை சிதம்பரத்தில் துணிகரம்

சிதம்பரம்:சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் திடல்மேடு சரோஜினி நாயுடு நகரை சேர்ந்தவர் விஜயராகவன்,41; அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ளார். பள்ளி விடுமுறையால், மனைவி மற்றும் குழந்தைகள் நெல்லிக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தனர்.விஜயராகவன் கடந்த 29ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், வேலை முடித்து நெல்லிக்குப்பத்திற்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசில் விஜயராவன் புகார் அளித்தார். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.கடலுாரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டன.அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி