உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார்கோவில் கல்லுாரியில் 26, 27ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

காட்டுமன்னார்கோவில் கல்லுாரியில் 26, 27ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்ககை கலந்தாய்வு நாளை (26ம் தேதி) மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.இதுகுறித்து கல்லுாரி முதல்வர் மீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நாளை (26ம் தேதி) நடக்கும் கலந்தாய்வில் பி.ஏ., தமிழ்., பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., ஆகிய கலைப் பாடப்பிரிவுகளுக்கும், 27 ம் தேதி பி.எஸ்.சி., கணிதம். பி.எஸ்.சி., கணினி அறிவியில் பாடப்பிரிவுகளுக்கும் இண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது.இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்த மாணவர்களும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு, அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் இதர ஆவணங்கள், அசல் மற்றும் மூன்று நகல்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ