உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 3 குழந்தைகளின் தாய் மாயம் விருதை போலீஸ் விசாரணை

3 குழந்தைகளின் தாய் மாயம் விருதை போலீஸ் விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வேலைக்கு சென்ற நிலையில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி வனிதா, 28. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. 2 மகள், 1 மகன் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் உடல்நிலை பாதித்து வீட்டில் உள்ள நிலையில், கடந்த 2ம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்ற வனிதா வீடு திரும்பவில்லை.அவரது உறவினர் பெருமாள் மனைவி அந்தோணியம்மாள் புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி