| ADDED : மே 19, 2024 05:20 AM
புவனகிரி : புவனகிரி அருகே முன் விரோத தகராறில் 3 பேரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த பெருமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைராஜன், 44; அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 13ம் தேதி இரவு திருமலைராஜன் தனது நண்பர்களான அதேப்பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், 45; பூதவராயன்பேட்டை விஜயகுமார் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்தினார்.அப்போது அங்கு வந்த அருண்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமலைராஜன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றார். தப்பியோடிய மூவரையும் கத்தியால் வெட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த 3 பேரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து பெருமாத்துார் புகழேந்தி, 25; ஆதிவராகநத்தம் தியாகராஜன், 45; ரஞ்சித்குமார், 23; ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் உட்பட மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.