உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே தெரு நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.சிறுபாக்கம் அடுத்த பனையாந்துார் கிராமத்தில் வெறிபிடித்த தெருநாய் நேற்று காலை 8:00 மணியளவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூர்த்தி மகள்கள் யாழினி, 8; யோகேஸ்வரி, 7; தர்மதுரை மகன் ஹரிஷ், 7; ராஜா மகன் புகழ், 10; கருப்பையா மகள் காவியா, 7; செல்லம், 37; வெங்கடேஷ், 38; ஆகியோரை விரட்டி கடித்தது.காயமடைந்த அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் கிராமத்தில் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை