உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு

பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கடைவீதியில் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசினார்.அப்போது அங்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து ஆபாசமாக பேசினார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், சின்ன தோப்புக்கொல்லை, ரோட்டு தெருவைச் சேர்ந்த பிரசாத், 36; என தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை