உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு

இருபிரிவினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரில் தேர்தலன்று இருபிரிவினரிடையே ஏற்பட்ட தகராரில், இருபிரிவினரைச் சேர்ந்த 17 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சந்திரபாபு, 50; கூலித்தொழிலாளி. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 19 ம் தேதி லோக்சபா தேர்தலில் வாக்களித்து விட்டு வரும்போது, அதே பகுதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மகாதேவன் மகன் தினேஷ்,பாஸ்கர் மகன் சண்முகம், ரமேஷ் மகன் ஸ்ரீராமன் உள்ளிட்ட சிலர் பைக்குகளில் சத்தம் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். ஏன் சத்தம் போட்டு செல்கிறீர்கள் என்று கேட்டதால் தகராறு ஏற்பட்டு சந்திரபாபுவை தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த சந்திரபாபு தரப்பினரை சேர்ந்த சுப்புராயன் மகன்கள் சந்திரபாண்டி, சுரேந்தர், சுந்தர்ராஜ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து மகாதேவன் மனைவி செல்வராணியை தாக்கினார். இது குறித்து இரு பிரிவினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், இரு பிரிவினரைச் சேர்ந்த 17 பேர் மீது, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை