உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்பதி தாக்கு மூவர் மீது வழக்கு

தம்பதி தாக்கு மூவர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் தம்பதியை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.குள்ளஞ்சாவடி அடுத்த, அப்பியம்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராஜம். கணவன் மனைவி இருவரும் நேற்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வயல் வழியாக அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி, கோமதி, ராகுல் காந்தி ஆகியோர் நடந்து வந்தனர். இதனை தட்டிகேட்டதால், மூவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி ராஜத்தை தாக்கினர்.புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை