உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ஓட்டு எண்ணும் மையம் தயாராகிறது

கடலுாரில் ஓட்டு எண்ணும் மையம் தயாராகிறது

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில், கடலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் இக்கல்லுாரியில் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாத்து வைத்து, ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வைப்பு அறைகள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அறைகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது, பாதுகாப்பான முறையில் ஓட்டு எண்ணிக்கை பணி மேற்கொள்ள தடுப்புகள் அமைப்பது, மின் இணைப்பு, மின் விசிறி பொருத்துவது உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை