உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காணாமல் போன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

காணாமல் போன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் காணாமல் போன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் 5 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய எம்.எல்.ஏ.,சத்யா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் செலவு செய்து பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்தனர்.இவை மக்களின் குடிநீர் தேவைக்கு பயனுள்ளதாக இருந்தது. சாலை விரிவாக்க பணியின் போது போலீஸ் நிலையம் அருகே இருந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை அகற்றினர்.ஆனால் அதன்பிறகு அதை பொறுத்தவில்லை.பஸ் நிலையத்தில் இருக்கும் இயந்திரமும் பழுதாகி வீணாகிறது.இதை சரி செய்தும்,அகற்றப்பட்ட இயந்திரத்தை பொறுத்தியும் மக்களுக்கு கோடையில் குடிநீர் வழங்கியிருக்கலாம்.ஆனால் இதை சரி செய்யாமல் அலட்சியமாக இரண்டு இடங்களிலும் குடிநீர் வழங்க ஒப்பந்ததாரருக்கு டெண்டர் விட்டுள்ளனர்.மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி