உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரையில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த சின்னபுங்கனேரியை சேர்ந்தவர் முருகன், 39; இவர், கடந்த 30 ம் தேதி, மாலை காட்டுமன்னார்கோவிலில் இருந்து சேத்தியாதோப்புக்கு, வீராணம் ஏரிக்கரை சாலையில் சென்றார். கொள்ளுமேடு இரட்டை பாலம் வாய்க்கால் அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகன் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாகடர், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.இது குறித்து புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ