உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்

சிதம்பரம், : சிதம்பரத்தில், மாற்றுத்திறனாளி வாலிபருக்கு, மூன்று சக்கர வாகனத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தியாகராஜன் என்பவர், தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 96 ஆயிரத்தில், மூன்று சக்கர வாகனம், தியாகராஜனக்கு வழங்கப்பட்டது. பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்..நிகழ்ச்சியில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு, முடநீக்கியல் வல்லுநர் சுந்தரவடிவேல், அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள். ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி