உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிவராகநத்தம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 

ஆதிவராகநத்தம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 

புவனகிரி : புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் செல்வ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம், வாட்டர் டேங்க் நகரில் புதிதாக செல்வ கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜையும், தொடர்ந்த மகா பூர்ணஹூதி தீப ஆராதனை நடந்தது. 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை