| ADDED : மே 28, 2024 06:27 AM
கிள்ளை : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அரசு கலைக் கல்லுாரியில், சிறப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நாளை (29ம் தேதி) நடக்கிறது.இதுகுறித்து சிதம்பரம் கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன், காட்டுமன்னார்கோவில் கல்லுாரி முதல்வர் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அரசு கலைக் கல்லுாரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்கள் சேர்க்கை நாளை நடக்கிறது. சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் உடல் ஊனமுற்றோர், விளையாட்டு, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோர் சேர்க்கப்படுவர்.சேர்க்கைக்கு வரும்போது, இணைய வழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், பத்தாம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் சான்றிதழ் கையெப்பம்).6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 அரசு பள்ளிகளில் படித்த சான்று, ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இதர சான்றிதழ்கள், போட்டோ, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன், நாளை காலை 9:30 மணிக்குள் கல்லுாரிக்கு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.