| ADDED : மே 16, 2024 11:48 PM
கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் அமைத்த நீர் மோர் பந்தலை, உட்கட்சி பூசல் காரணமாக போலீசார் அகற்றினர்.கடலுாரில், மாவட்ட செயலாளர் சம்பத் ஆதரவாளர்கள் சார்பில் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து அதே கட்சியை சேர்ந்த எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட இடங்களில் நீர், மோர் வழங்க ஏற்பாடு செய்தார்.இந்நிலையில் நேற்று காலை போலீசார், நீர் மோர் வழங்க அனுமதி இல்லை எனக்கூறி அ.தி.மு.க.,வினர் வைத்த நீர், மோர் பந்தல்களை அதிரடியாக அகற்றினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த கார்த்தகேயனிடம் போலீசார், உங்கள் கட்சியை சேர்ந்த சிலர் மாவட்ட செயலாளர் கடிதம் இன்றி நீர், மோர் பந்தல் அமைக்க அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளனர். அதனால், நீர் மோர் பந்தல் அகற்றியதாக கூறினர். இச்சம்பவம் கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பூசலை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.