உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது 

அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது 

பாகூர்:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பத்மநாபன், 48, கடந்த, 28ம் தேதி காலை புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த இருளஞ்சந்தை அருகே பைக்கில் சென்றபோது, காரில் வந்த கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாகூர் போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில், கடலுாரில் கடந்தாண்டு நடந்த சீமந்த நிகழ்ச்சியில் நடனமாடியதில், பத்மநாபன் மகனுக்கும், தானம் நகர் ஆட்டோ டிரைவர் பாஸ்கர் உறவினருக்கும் தகராறு ஏற்பட்டதில், பாஸ்கர் கொலை செய்யப்பட்டார்.இதற்கு பழிக்குப்பழியாக, ஜாமினில் வந்த பத்மநாபனை, பாஸ்கரின் சகோதரர் அன்பு, 36, உறவினர்கள் அஜய், 24, நேதாஜி, 23, வித்யாதரன், 25, உள்ளிட்டோர் கொலை செய்தது தெரிய வந்தது. பண்ருட்டியில் பதுங்கிய அன்பு உள்ளிட்ட நான்கு பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ