உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., ஓட்டுகளுக்கு காய் நகர்த்தும் அ.தி.மு.க.,

பா.ம.க., ஓட்டுகளுக்கு காய் நகர்த்தும் அ.தி.மு.க.,

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் தொகுதியில், பா.ம.க.,வினர் ஓட்டுகளை பெற அ.தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி போட்டியிடுகிறது. மேலும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சி தனது வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. பா.ம.க., வுக்கு இத்தொகுதில் செல்வாக்கு அதிகம் உள்ளது குறிப்பாக புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.,வுக்கு ஓட்டுகள் அதிகம். இங்கு, பா.ம.க., நேரடியாக களம் இறங்காமல், கூட்டணியில் பா.ஜ., வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், இப்பகுதியில் பா.ம.க, ஓட்டுகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பா.ம.க., மீது அதிருப்தியில் உள்ளவர்களை தேடி பிடித்த, அந்த ஓட்டுகளை பெறுவதற்கு அ.தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அ.தி.மு.க., வினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை