உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்

கடலுார் : சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவோர், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சுற்றுலா துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகள் உலக சுற்றுலா தின விழா-2024 அன்று வழங்கப்பட உள்ளது. மாநிலத்தில் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, 48 விருதுகள் 17 வெவ்வேறு பிரிவுகளில் வரும் செப்., 27ம் அன்று, சென்னையில் வழங்கப்படுகிறது.எனவே, www.tntourismawards.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து 20.08.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு, சிதம்பரம் ரயில்வே பீடர் சாலையில் இயங்கிவரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 04144 238739, 8939896399 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ