உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு

பஸ்சில் தகராறு; இருவர் மீது வழக்கு

புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமால், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு நேற்று முன்தினம் அரசு பஸ் சென்றது. பி.முட்லுார் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, அத்தியாநல்லுார் வேல் முருகன், வில்லியநல்லுார் பழனிவேல் இருவரும் பஸ்சில் ஏறினர். இருவரும் டிக்கெட் எடுத்தபோது, பயணக்கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி, கண்டக்டர் தினேஷிடம் தகராறு செய்தனர். அதையடுத்து, பஸ்சை புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி, இருவர் மீது, கண்டக்டர் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தாக, வேல்முருகன், பழனிவேல் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை