சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய கிராமங்களான கூளாப்பாடி, தென்பாதி, வடக்கு விருத்தாங்கன், தெற்குவிருத்தாங்கன் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், தி.மு.க., ஆட்சி வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த திட்டங்களான படித்த மாணவிகளுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், லேப்டாப், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கான திட்டங்களை நடைமுறை படுத்தாமல் நிறுத்தியது தி.மு.க., ஆட்சிதான், ஆகவே பொதுமக்கள் தமிழகத்தையும், ஏழை எளிய மக்களை காப்பதற்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளியுங்கள் என கேட்டுக்கொண்டார்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கருப்பன், சிவஞானம், கமலக்கண்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், சுனிதாபாரதி, செந்தமிழ்செல்வன், கிளை செயலாளர்கள் தமிழ்மணி, அய்யப்பன், செல்வரங்கம், மகேந்திரன், இளங்கோவன், குமார், நந்தினி பிரபாகரன், ரவிச்சந்திரன் மற்றும் தே.மு.தி.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.