உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறார் மன்ற தலைவர்களுக்கு பொறுப்பு குறித்த விழிப்புணர்வு

சிறார் மன்ற தலைவர்களுக்கு பொறுப்பு குறித்த விழிப்புணர்வு

கிள்ளை: கிள்ளையில், சிறார் மன்ற தலைவர்களுக்கான கடமைகள், பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கிள்ளை அருகே பொன்னந்திட்டு, எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் நகர், தில்லைவிடங்கன், கிள்ளை பட்டினவர் ஆகிய பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஏக்தா நம்பிக்கை மையத்தின் மூலம் சிறுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சிறுவர் மன்றங்களில், கல்வித் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், சுகாதாரத்துறை தலைவர், நிதி தலைவர், தோட்டக்கலைத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். மன்றத்தின் மூலம் மாணவர்கள், தங்களுக்கு தேவையானவைகளை கலந்துபேசி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து நிவர்த்தி செய்ய வேண்டும்.இந்நிலையில் சிறார் மன்ற தலைவர்களுக்கு பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், இலவச சட்டப் பணிகள் ஆணைய குழுவின் சட்ட தன்னார்வலர் சர்மிளா ஆகியோர் பங்கேற்று பேசினர். மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.ஏற்பாடுகளை, ஏக்தா நம்பிக்கை மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வைதேகி, களப்பணியாளர் பபித்தா, கணினி பயிற்சி ஆசிரியை ஆச்சி பொண்ணு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை