உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதிக்கான பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் தட்சணாமூர்த்தி, மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ராமச்சந்திரன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.மாநில அமைப்பு செயலாளர் சண்முகம்,வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மாவட்ட செயலாளர்ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.மாநில மகளிரணி செயலாளர் தானாயி, பசுமைத் தாயக மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாணவரணி செயலாளர் விஜயவர்மன், துணைச் செயலாளர் ரமேஷ், இளைஞர் சங்க செயலாளர் சந்திரசேகர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பா.ம.க., தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணிதலைவர்கள், செயலாளர்கள் பதவிக்கு நியமன விண்ணப்ப படிவம் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்