உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொறியியல் படிப்புகளுக்கான சிறந்த தேர்வு காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,கல்லுாரி

பொறியியல் படிப்புகளுக்கான சிறந்த தேர்வு காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,கல்லுாரி

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி. கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி அளிக்கும் நோக்கத்துடன் 2009ல் துவங்கப்பட்டது. சிறந்த பொறியியல் கல்வியை தேடி வரும் மக்களின் முதல் தேர்வாக இக்கல்லுாரி உள்ளது. சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினிகயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் , இளங்கலை படிப்புகளும், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் முதுகலை படிப்புகளும் வழங்கப்படுகிறது.மாவட்ட அளவில் இயந்திரவியல் துறையில் ஆராய்ச்சி வசதிகளை கொண்டது. துவங்கிய முதலாம் ஆண்டிலிருந்தே அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் கடலுார் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள 463 பொறியியல் கல்லுாரிகளில், தரவரிசை பட்டியலில் எம்.ஆர்.கே., கல்லுாரி 71வது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னணி நிறுவனங்களுன், கல்லுாரி சார்பில் ஆயிரத்து 210 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யபட்டுள்ளன.கேட், நான்- கேட் மற்றும் யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய சிறப்புப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த இலக்கியப் போட்டிகள், நேர்காணல் எதிர்க்கொள்ள ஆங்கிலமொழி மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது.என்.எஸ்.எஸ்.,திட்ட அலுவலர் விருதையும், அண்ணா பல்கலைக்கழக அளவிளான சிறந்த என்.எஸ்.எஸ்., பிரிவு விருதையும் பெற்றுள்ளது. இதுவரை எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரத்து 10 மாணவர்கள் கேம்பஸ் மற்றும் ஆப் கேம்பஸ் நேர்காணல்கள் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல மற்றும் மாநில அளவிளான போட்டிகளில் மாணவர்கள் இதுவரை 1 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.மாணவ, மாணவியருக்கென தனித்தனி விடுதி வசதி உள்ளது. விடுதி மாணவர்களின் தேவைகளுக்கேற்ப சிறப்பு கவனம் செலுத்தி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அனைத்து முக்கிய தடங்களிலிம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள திடமான காரணங்களால் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி என்றென்றும் பொறியியல் படிப்பிற்கான மக்களின் சிறந்தத் தேர்வாகக் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை