உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சைக்கிள் போட்டி: மாணவர்கள் ஆர்வம்

சைக்கிள் போட்டி: மாணவர்கள் ஆர்வம்

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில், பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடலுார் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. கடலுார் வட்டாரத்தில் உள்ள 42 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நேற்று கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் கேரம் மற்றும் பீச் வாலிபால் போட்டிகள் நடந்தது. தொடர்ந்து, தேவனாம்பட்டினம் சில்வர் பீச் ரோட்டில் சைக்கிள் போட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இன்று (13ம் தேதி) மற்றும் 16ம் தேதி நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கையுந்து பந்து, வளைபந்து, எரிபந்து, கபடி, கோ கோ ஆகிய போட்டிகள் நடக்கிறது.குறுவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று விளையாடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி