உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்து பெண் பலி

பைக் விபத்து பெண் பலி

புவனகிரி: புவனகிரி அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் பகுதியைச் சேர்ந்தவர் நவுசாத் அலி, 38. இவரது மனைவி ஜாஸ்மின், 28. மாமியார் ஷாகிதாபேகம், 52. ஆகியோர் நேற்று முன் தினம் ஒரே பைக்கில் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை நவுசாத் அலி ஓட்டினார். புவனகிரி அடுத்த சீயப்பாடி பகுதியில் வந்தபோது, நாய் துரத்தியதால் பைக் எதிர்பாராத விதமாக தடுப்புக்கட்டையில் மோதியது. இதில், மூவரும் படுகாயமடைந்தனர். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட ஜாஸ்மின் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ