உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் குறிஞ்சிப்பாடியில் ஓட்டு சேகரிப்பு

பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் குறிஞ்சிப்பாடியில் ஓட்டு சேகரிப்பு

வடலுார் : கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், வடலுார் சத்தியஞான சபைக்கு நேற்று காலை வந்தார். அவர் சத்ய ஞான சபை, தர்மசாலை ஆகிய இடங்களில் வழிபாடு செய்தார்.பின், பிரசாரத்தை துவக்கிய அவர், பேசியதாவது;வள்ளலார் ஒரு தத்துவ மேதை. உலகில் யாரும் சொல்லாததை அவர் கூறியுள்ளார். தென்னாற்காடு மாவட்டத்தில் எந்த வீட்டுக்கு சென்றாலும் வள்ளலார் படம் இருக்கும்.தமிழக அரசு சர்வதேச மையம் அறிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போது தமிழக அரசு செயல் வருத்தம் அளிக்கிறது. பார்வதிபுரம் கிராம மக்கள் 106 ஏக்கர் தங்கள் நிலத்தை வள்ளலார் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் என, கொடுத்தனர்.அந்த இடத்தை தோண்டி சர்வதேச மையம் அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர். அவர் பிறந்த மருதுாரில், அவர் நிர்வாகம் செய்த கருங்குழியில், அவர் சித்தி பெற்ற மேட்டுகுப்பத்தில் ஆரம்பிக்கலாம். தமிழக அரசுக்கு யாரோ தவறான வழிகாட்டுதல்படி இப்படி செயல்படுகிறது. இதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர், பேசினார்.தொடர்ந்து அவர் வடலூர் ஜோதி நகர், வள்ளலார் நகர், கோட்டக்கரை, காட்டுக்கொள்ளை, என்.எல்.சி. ஆபீஸ் நகர், பாலாஜி நகர், ஆபத்தாரணபுரம், சேராகுப்பம், எம்.ஜி.ஆர்.நகர், மேட்டுக்குப்பம், கொளக்குடி ,கருங்குழி, மருவாய், அரங்கமங்கலம், கல்குணம் உட்பட பல கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.அப்போது, பா.ம.க., மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் புஷ்பா, ஒன்றிய செயலாளர் சுதாகர், இளைஞர் அணி தலைவர் ரத்தினவேல், ஒன்றிய தலைவர் பாண்டு, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா, பா.ஜ., நகர தலைவர் திருமுருகன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் வெங்கடாசலம், ஓ.பி.சி., அணி மாவட்ட பொது செயலாளர் பாலு, மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை