உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் ரத்த தான முகாம்

நெய்வேலியில் ரத்த தான முகாம்

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -18ல் உள்ள என்.எல்.சி., இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. காஸ்மோபாலிடன் அரிமா சங்க மாவட்ட தலைவர் பெரியநாயக சுவாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அரிகிருஷ்ணன், இயக்குனர் சுபாகர், துணை பொருளாளர் ஜெகன், ஓ.பி.சி., சங்க செயலாளர் அழகுராஜ் முன்னிலை வகித்தனர். மருத்துவ அதிகாரி குலோத்துங்க சோழன் வரவேற்றார். முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ், இயன்முறை மருத்துவர் சசிகுமார், சுகாதார இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கம்மாபுரம் வட்டார ஆலோசகர் தங்கமணி மற்றும் ஆய்வக நிபுணர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி