உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ப ொக் லைன் திடீர் பழுது: போக்குவரத்து பாதிப்பு

ப ொக் லைன் திடீர் பழுது: போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பொக்லைன் வாகனம் திடீரென பழுதாகி நின்றதால், போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலத்தில் பிரதான ஜங்ஷன் சாலையில், பஸ் நிலையம், தனியார் மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், உளுந்துார் பேட்டை, விழுப்புரம் மார்க்கத்தில் சென்னை செல்லும் வானங்களும் இதன் வழியாக செல்கின்றன. நேற்று மாலை 3:30 மணியளவில், அவ்வழியே சென்ற பொக்லைன் வாகனம் ஆயியார் மடம் தெருவில் நுழைய முயன்றபோது, திடீரென பழுதடைந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகசேன் தலைமையிலான போலீசார் வந்து, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இருப்பினும் பொக்லைன் பழுது நீக்கப்படாததால், அதன் பக்கெட் உதவியுடன் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி