உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது

புவனகிரி அருகே குண்டு வீச்சு தலைமறைவு வாலிபர் கைது

புவனகிரி: முன்விரோத தகராறில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்ய முயன்ற வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த பெருமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமலைராஜன், 44; அருண்குமார். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. திருமலைராஜன் கடந்த மே 13ம் தேதி இரவு தனது நண்பர்களான சுந்தரபாண்டியன்,45; பூதவராயன்பேட்டை விஜயகுமார் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்தினார்.அப்போது, அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமலைராஜன் உள்ளிட்ட மூவரையும் பெட்ரோல் குண்டு வீசி, வெட்டி கொலை செய்ய முயன்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து 6 பேரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு ராஜசேகர் மகன் விமல்ராஜ்,25; என்பவரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும், இருவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ