உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தக வாசிப்பு பயிற்சி

புத்தக வாசிப்பு பயிற்சி

சிதம்பரம்: பள்ளி மாணவ, மாணவர்களிடத்தில், புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.சிதம்பரம் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சேதுசுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். புத்தக வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புத்தக வாசிப்பு, பிழையின்றி எழுதுதல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்துதல், காந்திய சிந்தனை, மனித நேயம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தார்.நிகழ்ச்சியில் பேராசிரியர் கண்ணன், சொக்கன்கொல்லை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனுவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே சென்று பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை