உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடியில் இரண்டு வீடுகளில் திருட்டு

திட்டக்குடியில் இரண்டு வீடுகளில் திருட்டு

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கோழியூரில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து ஏழு சவரன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த கோழியூர் பெருமாள் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்,29; இவர் நேற்று முன்தினம் தனது வீட்டைப்பூட்டிவிட்டு திட்டக்குடியிலுள்ள அண்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தார்.நேற்று மதியம் 12.30 மணிக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் திருடுபோனது. அதே வீட்டின் மாடியில் வசிக்கும் தெய்வசிகாமணி மனைவி கவிதா,47; என்பவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்குச்சென்று நேற்று மாலை 5.30மணிக்கு திரும்பினார்.அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளிருந்த நகைகள் திருடு போனது தெரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டு வீடுகளிலும் ஏழு சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.நேற்று நள்ளிரவில் அதேபகுதியில் மர்ம நபர்கள் சிலர் வேறு வீடுகளிலும் திருடு முயற்சித்தபோது, பொதுமக்கள் பார்த்து சத்தம் போடவே அவர்கள் தப்பியோடினர்.தப்பியோடிய மர்மநபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை