உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடையில் விழுந்த  மரக்கிளை அகற்றப்படுமா

ரேஷன் கடையில் விழுந்த  மரக்கிளை அகற்றப்படுமா

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சூறைக்காற்றில் ரேஷன் கடை மேற்கூரை மீது முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் ஜெயில் தெருவில், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிரே நின்றிருந்த 70 ஆண்டுகள் பழமையான அரச மரம், கடந்த 10ம் தேதி இரவு வீசிய சூறைக்காற்றில் முறிந்து விழுந்தது. மரத்தின் ஒரு பகுதி முறிந்து, அங்கிருந்த ரேஷன் கடை கட்டடத்தின் முகப்பு மேற்கூரை, மின் கம்பங்கள் மீது விழுந்தது. அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், நகராட்சி மற்றும் மின் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு, மறுநாள் மாலை 5:00 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது. ஆனால், ரேஷன் கடை மேற்கூரை மீது விழுந்த மரக்கிளை மட்டும் அகற்றப்படவில்லை.இதனால், பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் சிரமமடைகின்றனர். எனவே, ரேஷன் கடை முகப்பில் காட்சிப் பொருளாக மாறிய மரக்கிளையை முற்றிலுமாக அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை