உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் நேரத்தில் இதுபோல் செய்யலாமா? மா.செ., மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தி

தேர்தல் நேரத்தில் இதுபோல் செய்யலாமா? மா.செ., மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தி

நெல்லிக்குப்பம்: நகர நிர்வாகிகளுக்கு தெரிவிக்காமல் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திச் சென்ற மாவட்ட செயலாளர் மீது நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.நெல்லிக்குப்பம் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் ஆதரவாளராக செயல்பட்டார். சில மாதங்களுக்கு முன் திடீரென கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெற்றார்.ஏற்கனவே 2 மாவட்ட செயலாளர்களும் தனித்தனி அணியாக செயல்படும் நிலையில், திடீரென, தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அணி மாறியதால் கணசேன் கடும் கோபத்தில் இருந்தார்.இந்நிலையில் நேற்று, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அலுவலகத்திற்கு அமைச்சர் கணேசன் வந்தார். அங்கு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 'லோக்சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அதிகபட்ச ஓட்டுகளைப் பெறாவிட்டால் தலைமையில் புகார் அளிப்பேன்' என எச்சரித்தார்.கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலு, பொருளாளர் ஜெயசீலன், இளைஞரணி ராஜா உட்பட பலர் பங்கேற்ற நிலையில், நகர செயலாளர் மணிவண்ணனுக்கு அழைப்பில்லாததால் அவர் பங்கேற்கவில்லை.தி.மு.க., நகர அலுவலகம் வழியே சென்ற அமைச்சர், நகர செயலாளர் அங்கு இருந்தும் கண்டு கொள்ளாமல் சென்றதால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.நகர நிர்வாகிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் தனியார் இடத்தில் அமைச்சர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது கட்சியினருக்கு வருத்தமளிக்கிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல் ஒற்றுமையை எப்படி ஊக்குவிக்கும் என கேள்வி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.இதேபோன்று பெண்ணாடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்குச் சென்ற மாவட்ட செயலாளர் கணேசன், தனியார் தங்கும் விடுதியில் ஒரு சில நிர்வாகிகளை மட்டும் வரவழைத்து 9:00 மணி வரை ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான நிர்வாகிகளை அழைக்காததால் ஏன் வந்தார். எதற்காக வந்தார் என தெரியாமல் புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை