உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு

தபால் ஓட்டை பெட்டியில் போட்டவர் மீதுவழக்கு

புவனகிரி, : புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர். அப்பகுதியில் உள்ள அரசு ஊழியர், அலுவல் சார்ந்த அவசர பணிக்கு சென்றதால், அவரது ஓட்டினை பதிவு செய்து, கவரினை ஓட்டி, அப்பகுதி கவுன்சிலர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார். அவரும் எடுத்துச் சென்று பெட்டியில் போட்டார். அதற்கு அங்கிருந்த அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜூ புகாரின் பேரில், புவனகிரி போலீசார், தபால் ஓட்டை பெட்டியில் போட்ட கவுன்சிலர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ