உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.எல்.ஏ., தலைமையில் முதல்வர் திட்ட முகாம்

எம்.எல்.ஏ., தலைமையில் முதல்வர் திட்ட முகாம்

கடலுார் : கடலுார் அடுத்த பள்ளிப்பட்டு, துாக்கணாம்பாக்கம், கரைமேடு, எம்.பி., அகரம், திருப்பணாம்பாக்கம் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் பலராமன், பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பிரபாகரன், குடிமை பொருள் தாசில்தார் ஜெயகுமார் முன்னிலை வகித்தனர். இதில், இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.அப்போது, ஊராட்சி தலைவர்கள் ஞானபிரகாசம், ஏலகண்ணி காசிநாதன், பாண்டியன், சரவணன், மனோகர், துணைத் தலைவர் ராஜா, ராமதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், நிர்வாகிகள் சதீஷ், ஞானம், மூர்த்தி, நந்தன், ராம்குமார், அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, முத்துகிருஷ்ணன், ராம்குமார், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை