உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த இருப்பு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.முகாமிற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார்.தாசில்தார் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ரேவதி சிதம்பரம் வரவேற்றார்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர்கள் முதனை செல்வராசு, கோட்டேரி கதிரன், கொள்ளிருப்பு வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் ராசவன்னியன், ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி அய்யப்பன், காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், ரகுபதி, லெனின், தி.மு.க., பூமணி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் இந்திராணி, வி.ஏ.ஓ.,க்கள் அய்யப்பன், அருள்பிரகாசம், ஜெயா ஆகியோர் செய்திருந்தனர். முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு இருப்பு, முதனை, கொள்ளிருப்பு, கோட்டேரி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை