உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி, மஞ்சக்கொல்லையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

புவனகிரி, மஞ்சக்கொல்லையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம், மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராதாபுருேஷாத்தமன், விசுவேல்முருகன், பிரபுதாஸ், செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் தனபதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். முகாமில் அம்பாள்புரம், உளுத்துார், பிரசன்னாராமாபுரம், வடதலைக்குளம் மற்றும் மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேரில் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். முகாமில் மின்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டு வசதி, போலீஸ், மாற்றுத்திறனாளி, சமூக நலம், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சுகாதாரம், வேளாண் மற்றும் தோட்டக்கலை, பிற்படுத்தப்பட்டோர் நலன், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை