உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

புவனகிரி: புவனகிரி ஒன்றியம், பு.மணவெளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.பு.மணவெளி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் அருணகிரிநாதன் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் அமுதாராமலிங்கம், மோகன்தாஸ், வட்டார கல்வி அலுவலர் லட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்சங்கு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மன்ற மாநில துணை தலைவர் வரதராஜன், ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வீரப்பாண்டியன், ஓய்வ பெற்ற தலைமை ஆசிரியர் செல்வராசு, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சீத்தாராமன் ஏற்புரை நிகழ்த்தினார். அன்பரசு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரயில்வே பொறியாளர் தாமோதரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி